ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஒருவர் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் காயமுற்ற ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News image
Updated On :1 செப்டம்பர் 2015, 2:48 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் காயமுற்ற ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவகாசி, புதுத்தெருவைச் சேர்ந்தவர் கந்தையா மகன் மாரியப்பன் (37). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு நேற்று சிவகாசிக்கு மோட்டார் சைக்கிளிலில் சென்றுள்ளார். அப்போது சிவகாசி சாலையில் கொள்ளூர்பட்டி விலக்கு அருகே சாலையை கடக்க முதலியார்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (48) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இருவரும் காயம் அடைந்தனர். சுய நினைவு இழந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் மாரியப்பன் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.