திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,  3 உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.

அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் மு.பரத் பட்டர் ஆவணித் திருவிழாவிற்கான கொடியினை ஏற்றினார். தொடாந்;து கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரமாகி காலை 6.20 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை சுப்பிரமணியன் தம்பிரான் சுவாமிகள், திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன், காவல் துணை கண்காணிப்பாளர் கோபால், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், உள்துறை மேலாளர் அய்யாப்பிள்ளை, திருவிழா பணியாளர்

கோ.வெங்கடேசன், ராமசாமி, கிட்டுமணி, சிவா உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்களும்,  ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன் உள்ளிட்ட பக்த கோடிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com