பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியி்ல் சில தினங்களாக பெய்த மழையால் வியாழக்கிழமை பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியி்ல் சில தினங்களாக பெய்த மழையால் வியாழக்கிழமை பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாததால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு வேகமாக சரிந்து வருகிறது. 84 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் நீர்மட்டம் 25 அடியாக குறைந்ததை அடுத்து அணை மூடப்பட்டது.

இதையடுத்து கடனாநதி அணையின் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 4,500 ஏக்கர் நிலங்களில் நெற்பயிர் கருகும் சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மிதமான மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு:

மூன்று தினங்களுக்கு முன் 85 கனஅடி நீர்வரத்து இருந்த பாபநாசம் அணைக்கு இன்று(வியாழக்கிழமை) 958.45 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 52.55 அடியாக இருந்தது. இதேபோல் சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 600 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 65.32 அடியாகவும் இருந்தது.

பாசனம், குடிநீர் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து 504.75 கனஅடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து 250 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 57.94 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 25 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 31.50 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 56.42 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 56.75 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 20.25 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும் இருந்தது.

பதிவான மழை:

வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 17 மி.மீ, பாபநாசம் கீழ் அணையில் 3 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 1.8 மி.மீ, குண்டாறு அணையில் 16 மி.மீ, அடவிநயினார் அணையில் 4 மி.மீ, தென்காசி, அம்பாசமுத்திரம், நான்குனேரியில் தலா 2 மி.மீ, செங்கோட்டையில் 7 மி.மீ, ராதாபுரத்தில் 10 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டில் 1 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com