தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: தமிழருவி மணியன்

வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பெரும்பாண்மையுடன் வெற்று பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று காந்திய மக்கள் இயக்கம் மாநில தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: தமிழருவி மணியன்
Updated on
1 min read

வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பெரும்பாண்மையுடன் வெற்று பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று காந்திய மக்கள் இயக்கம் மாநில தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழக அரசு சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி உள்ளது வரவேற்கத்தக்கது. ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வருவாய் கிடைக்கும் என்று முதல்வர் கூறி உள்ளார். அது எந்த காலத்தில் கிடைக்கும்? எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்? என்பதை அரசு தெளிவாக வெள்ளை அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும். அதை நான் விமர்சிக்க விரும்பவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலில் 25 இடங்களில் காந்திய மக்கள் இயக்கம் போட்டியிடும். மக்கள் நலன் காக்கும் கூட்டணியில் 5 கட்சிகள் உள்ளன. அதை இன்னும் வலிமைபடுத்த வேண்டும். தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகளை அந்த அமைப்புக்கு இழுக்க முயற்சி செய்ய வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். 1967-ல் இருந்து அவர்கள் தனித்து போட்டியிட்டது கிடையாது. அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுகிறது.

அ.தி.மு.க.வுக்கு 35 சதவிகிதம் வாக்குகளும், தி.மு.க.வுக்கு 20 சதவிகிதம் வாக்குகளும் உள்ளது. மக்கள் நல கூட்டணிக்கு 10 சதவிகிதம் வாக்குகள் தான் உள்ளது. எனவே தே.மு.தி.க.வையும், த.மா.கா.வையும் இழுத்து வாக்கு விகிதத்தை 20 சதவிகிதமாக்கினால் வெற்றிவாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.

மேல்தட்டு மக்கள் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள். நடுதட்டு மக்கள் அ.தி.மு.க. மீது கோபமாக உள்ளார்கள். அடித்தட்டு மக்கள் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளார்கள். அவர்கள் வாக்கு அ.தி.மு.க.வுக்கு விழ வாய்ப்பு உள்ளதால் அ.தி.மு.க.தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

நமக்கு நாமே திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வரும் மு.க.ஸ்டாலினால் தொண்டர்களை உற்சாகப்படுத்த, ஊக்கப்படுத்த முடியும். தி.மு.க. ஆட்சிக்கு வர உதவாது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com