முதல் திருமணத்தை மறைத்து பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞர் கைது

காரைக்கால் அருகே பள்ளி மாணவியை 2-வதாக திருமணம் செய்துகொண்ட சுமை ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

காரைக்கால் அருகே பள்ளி மாணவியை 2-வதாக திருமணம் செய்துகொண்ட சுமை ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம், போலகம் பகுதி ஜேம்ஸ் மகன் சாமுவேல் (25). இவர் சுமை ஆட்டோ ஓட்டுநராக இருந்துவருகிறார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணாகியுள்ளது. இந்த நிலையில், நிரவி அரசுப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 15 வயது மாணவி ஒருவரை சாமுவேல் காதலித்துள்ளார்.

இருவரும் திங்கள்கிழமை காரைக்கால் கோயில் ஒன்றில்  திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணம் செய்துகொண்ட பின்னரே சாமுவேலுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருப்பது பள்ளி மாணவிக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து பள்ளி மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.  தமது மகளை கட்டாயப்படுத்தி சாமுவேல் திருமணம் செய்துள்ளதாக அவரது பெற்றோர் நிரவி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு செய்த போலீஸார் பள்ளி மாணவியை 2-வதாக திருமணம் செய்துகொண்ட சாமுவேலை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com