விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கேரளா பள்ளியுடன் கலசலிங்கம் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

கேரளா மாநிலத்தில் உள்ளி பள்ளியுடன் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மாணவர்களின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று(செவ்வாய்கிழமை) கையெழுத்திட்டுள்ளது.

News image
Updated On :22 செப்டம்பர் 2015, 1:45 pm

கோ.ஜெயக்குமார்

கேரளா மாநிலத்தில் உள்ளி பள்ளியுடன் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மாணவர்களின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று(செவ்வாய்கிழமை) கையெழுத்திட்டுள்ளது.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 200 பள்ளி, கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி இப் பள்ளி கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள் பல்கலைக்கழத்திற்கு வந்து ஆய்வுக் கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இங்குள்ள பேராசிரியர்கள் அப் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு கடினமான பாடப் பகுதிகளை விளக்கி வருவார்கள்.

தற்போது கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி இத் திட்டத்தில் இணைந்துள்ளது. பள்ளியின் நிர்வாகி அருட்தந்தை ஜாருவில் மற்றும் பல்கலைக்கழக கேரளா பள்ளி ஒருங்கிணைப்பு அதிகாரி பேராசிரியர் சாமுவேல் பிரின்ஸ் ஆகியோர் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். அப்போது உடன் பள்ளி ஆசிரியர் ஜோசிபென் உடனிருந்தார்.

இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின் மாணவர் நலத்துறை டீன் வெண்குமார் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.