
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காக்களூர் ஏரி உடையும் நிலையில் இருப்பதால் அதனை சுற்றி உள்ள 10 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூரில் அமைந்துள்ள காக்களூர் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால், அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இதனால், ஏரிகளின் கரைகள் பலவீனமாகி, அவை எப்போது வேண்டுமானாலும் உடையும் என்று கூறப்படுகிறது.
காக்களூர் ஏரி உடைந்தால், அதனை சுற்றி உள்ள என்ஜிஓ காலனி உள்ளிட்ட 10 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.