சென்னை வெள்ளம்: தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் 2400 பேர் மீட்பு

சென்னை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் இதுவரை 2400 பேர் மீட்கப்பட்டுள்ளனர்
சென்னை வெள்ளம்: தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் 2400 பேர் மீட்பு

சென்னை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் இதுவரை 2400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் மேலும் 600 பேர் சென்னை வருகினறனர்.

சென்னை மழை வெள்ளம் குறித்த, நெருக்கடி கால மேலாண்மை குழுக் கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மெகரிஷி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாதுகாப்பு, உணவு, ரயில்வே, வேளாண்மை, சுகாதாரம், தொலைதொடர்பு துறை அமைச்சக அதிகாரிகள்,  தேசிய பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், வானிலை மைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பங்கேற்றனர்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 30 குழுக்கள் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள தென் சென்னை பகுதியில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இக்கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பேரிடர் மீட்பு குழு (என்.டி.ஆர்.எப்.) தலைவர் ஒ.பி. சிங் கூறினார்.

மீட்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் மேலும் இரண்டு ராணுவ குழுக்களை அனுப்புவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஒரு ராணுவ குழுவில் 75 வீரர்கள் இடம் பெறுவர்.

என்.டி.ஆர்.எப். சார்பில் இதுவரை 2,400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், தற்போது பணியில் ஈடுபட்டுள்ள 600 பேர் தவிர மேலும், 600 பேரை சென்னைக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com