
சென்னை விமான நிலையம் குளம் போல காட்சி அளிப்பதால், புது தில்லியில் இருந்து தனி விமானத்தில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமான தளத்தில் வந்திறங்கினார்.
அவரை, தமிழக உயர் அதிகாரிகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் வரவேற்றனர்.
நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கன மழையால் சின்னாபின்னமாகியுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.
அரக்கோணத்துக்கு தனி விமானம் மூலம் வந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு வந்து, அங்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஹெலிகாப்டரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட உள்ளார்.
சில மணி நேரங்களுக்கு முன்புதான் ஹெலிகாப்டர் மூலம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுமார் ஒன்றரை மணி நேரம் பறந்தபடி பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.