
சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக அரக்கோணம் ராஜாளி விமான தளத்துக்கு ஹைதராபாத்தில் இருந்து சிறப்பு விமானத்தை இயக்குகிறது ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம்.
சென்னை விமான நிலையம் மூடப்பட்டதால் அங்கிருக்கும் பயணிகள் சிறப்பு ஹெலிகாப்டர்கள் மூலம் அரக்கோணம் கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல, சென்னை விமான நிலையம் வர வேண்டிய 30 பேரை ஏர் இந்தியா விமானம் அரக்கோணத்துக்கு அழைத்து வந்துள்ளது. தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்த 130 பயணிகளை ஹைதராபாத் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.