ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்: படைப்பாளிகள் பட்டியல் வெளியீடு

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் வரும் 18-இல் நடைபெறுகிறது.

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் வரும் 18-இல் நடைபெறுகிறது. இந்த விருதுகள் பெறுவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 இதுகுறித்து செந்தமிழ் அறக்கட்டளை வெளியிட்ட அறிவிப்பு:
 செந்தமிழ் அறக்கட்டளை சார்பில், 5-வது ஆண்டாக ஜெயந்தன் படைப்பிலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் இருந்து சிறந்த கவிதை நூல்களாக யூமா வாசுகியின் "சாத்தானும் சிறுமியும்', கவிஞர் கரிகாலன் எழுதிய "பாம்பாட்டி தேசம்' என்ற தொகுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டன. சிறுகதை தொகுப்பில், கவிப்பித்தன் எழுதிய "பிணங்களின் கதை', சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர் மாதங்கியின் "மெல்பகுலாúஸô' என்ற தொகுப்பும், சிறந்த நாவல்களாக "கருடகம்பம்', "மகாகிரந்தம்' ஆகியனவும், "நான் வடசென்னைக்காரன்' என்ற கட்டுரைத் தொகுப்பும் தேர்வு செய்யப்பட்டன.
 சிறந்த மொழிபெயர்ப்பாக, கவிதைகளும்-வாழ்க்கையும்' எனும் நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை விஜயலட்சுமி மொழி பெயர்த்துள்ளார். "நிகழ்கலையில் நான்' என்ற நூலுக்காக கமலாதேவி அரவிந்தனும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com