நாகர்கோவிலில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை: 100 சவரன் நகை கொள்ளை

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் நெல்சன் சுந்தர் (41). இவர் நாகர்கோவில் வேம்பமூடு சந்திப்பில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகின்றார்.
Updated on
1 min read

நாகர்கோவில்: நாகர்கோவிலைச் சேர்ந்தவர் நெல்சன் சுந்தர் (41). இவர் நாகர்கோவில் வேம்பமூடு சந்திப்பில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகின்றார். இவரது வீடு நாகர்கோவில் தெரிக் சந்திப்பில் அருகே உள்ள ஜக்கேப்  தெருவில் உள்ளது. இவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறையிலும், மற்றொரு அறையில் அவர்களது இரண்டு குழந்தைகளும் படுத்திருந்தனர்.

இந்நிலையில், பின்புறம் கதவை உடைத்து குழந்தைகள் உறங்கிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 100 பவுன் தங்க நகைகள் மற்றும் ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30-க்கு குளிர்சாதனப் பெட்டியை நிறுத்துவதற்காக நெல்சன் எழுந்துள்ளார். அப்போது, பின்புறக்கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்க்கையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

உடனே, அருகில் உள்ள நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு நகரத் துணை காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், வடச்சேரி காவல்நிலை ஆய்வாளர் சக்கரவர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணை குறித்த துப்புதுலக்க மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணரை வரவழைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com