வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆம்பூர் அருகே சொகுசு பேருந்து தீப்பிடித்து விபத்து: 30 பயணிகள் உயிர் தப்பினர்

ஆம்பூர் அருகே சொகுசு பேருந்து வியாழக்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 30 பயணிகள் உயிர் தப்பினர்.

News image
Updated On :21 ஏப்ரல் 2016, 9:12 am

ஆம்பூர்: ஆம்பூர் அருகே சொகுசு பேருந்து வியாழக்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 30 பயணிகள் உயிர் தப்பினர்.

சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி குளீருட்டப்பட்ட சொகுசு பேருந்து சென்றது. கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த ரவி (40) பேருந்தை ஓட்டிச் சென்றார். ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டு பகுதியில் பேருந்து வந்தபோது பின்புற சக்கரத்தில் திடீரென தீப்பிடித்தது.

அது பயணிகள் இருக்கை வரை பரவி எரிய ஆரம்பித்தது. அதையறிந்த உடன் பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். அவர்களுடைய உடமைகளும் வெளியேற்றப்பட்டது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த அனைவரும் உயிர்தப்பினர். ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.