அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி சுமார் 1000 பேர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Updated on
1 min read

அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி சுமார் 1000 பேர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அவிநாசியில் 14 சமூக ஆர்வலர்கள் பிப். 8-ஆம் தேதி முதல் நடத்திவரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேர் இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில ஈடுபட்டவர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியுள்ளனர். மேலும், அவர்கள் தங்களது குடும்ப அட்டையை அரசிடம் திருப்பி அளிக்கும் வகையில் அவைகளை கைகளில் ஏந்தி முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுடன் காவல் துறை மாநாகர துணை ஆணையர் திசா மிஷல், மாவட்டக் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com