ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரின் சிறைக்காவல் ஜூலை 21 வரை நீடிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு இம்மாதம் 21 ஆம் தேதி வரை சிறைக்காவலை நான்காவது முறையாக நீட்டித்து இலங்கை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவுயிட்டது.

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு இம்மாதம் 21 ஆம் தேதி வரை சிறைக்காவலை நான்காவது முறையாக நீட்டித்து இலங்கை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவுயிட்டது.

 ராமேசுவரம் பகுதியிலிருந்து ஜூன்  4 ஆம் தேதி பாஸ்கரன் என்பவர்க்கு சொந்தமான படகில் அப்துல்கரிம்,முருகன்,ஆரோக்கியம்,அப்தாஹீர் ஆகிய நான்கு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து இருந்தபோது அப்பகுதியில் வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து ஊர்க்காவல் துறை போலீஸôரிடம் ஒப்படைத்தனர்.அங்கு போலீசார் மீனவர்கள் மீது வழக்கு பதிந்து ஊர்க்காவல்துறை  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.அங்கு மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி ஜூன் மாதம் 16 ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவுயிட்டது

.அதன் பேரில் நான்கு மீனவர்களையும் போலீஸôர்  யாழ்பாணம் சிறையில் அடைத்திருந்தனர்.இந்த நிலையில் சிறையிலிருந்த 4 மீனவர்களை போலீசார் இரண்டாவது முறையாக ஜூன் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது ஜூன் 30 ஆம் தேதி வரை காவலை நீடித்தும்,மூன்றாவது முறையாக ஜூன் 30 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது  ஜூலை 8 ஆம் தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து உத்தரவுயிட்டிருந்தது. அதன் பேரில் 4 மீனவர்களையும் போலீசார் நான்காவது முறையாக வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு மீனவர்களை நீதிபதி சரோஜினிஇளங்கோவன் விசாரணை செய்தார்.

பின்னர் மீனவர்கள் வழக்கு குறித்து போதுமான ஆவங்களை இலங்கை கடற்படையினர்  நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை என்பதால் மீனவர்களின் வழக்கு குறித்த  இம்மாதம் 21 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும், அதுவரை 4 மீனவர்களையும் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவுயிட்டார்.அதன் பேரில் 4 மீனவர்களையும் போலீசார் யாழ்பாணம் சிறையில் மீண்டும் அடைத்தனர்.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com