கவிஞர் காளிதாசன் காலமானார்: சென்னையில் இறுதிச் சடங்கு

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான காளிதாசன் (68) உடல் நலக்குறைவால் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காலமானார்.
Updated on
1 min read

சென்னை: கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான காளிதாசன் (68) உடல் நலக்குறைவால் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காலமானார்.

 கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காளிதாசன், தஞ்சாவூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

திருப்பத்தூரை பூர்வீகமாக கொண்ட காளிதாசன், தாலாட்டு என்ற படத்தின் முலம் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு பாடல் எழுதி வந்த காளிதாசன் இதுவரை சுமார் 150 பாடல்களை எழுதியுள்ளார். தேவாவின் இசையமைப்பில் பல பாடல்களை எழுதியுள்ள இவ்ர், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

அவரது உடல் தஞ்சையிலிருந்து சென்னைக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டு, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது மூத்த மகனின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திங்கள்கிழமை மாலை மூலக்கொத்தலம் மயானத்தில் காளிதாசனின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

மறைந்த காளிதாசனுக்கு மனைவி புவனேஸ்வரி, மகன் பாலசுப்பிரமணியன் உள்ளனர். தொடர்புக்கு: 93452 - 03175.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com