

தியாகத்தைப் போற்றும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
தியாகத்தின் பெருமையை ஊருக்கும், உலகுக்கும் விளக்குவது தான் பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். இறை தூதரான இப்ராகிம், இறைவனின் கட்டளையை ஏற்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த தமது மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க முன்வந்த போது, வான் தூதரை அனுப்பி அதை தடுத்த இறைவன், மகனுக்குப் பதிலாக ஆட்டை பலிகொடுக்கும்படி கூறினார். இப்ராகிமின் தியாகத்தையும் இறைவன் பாராட்டினார். இதை குறிக்கும் வகையிலேயே பக்ரித் கொண்டாடப்படுகிறது.
உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பது தான் இந்த தியாகத் திருநாள் மூலம் உலக மக்களுக்கு உணர்த்தப்படும் செய்தியாகும்.
அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல்கள் மட்டும் தான் மகிழ்ச்சிப் படுத்தும். இதை உணர்ந்து, இறைவனின் கட்டளையை இறைதூதர் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இந்நன்னாளில் இசுலாமிய பெருமக்களோடு இணைந்து சபதம் ஏற்போம் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.