காலமானார் சிற்பி தட்சிணாமூர்த்தி

சுடுமண் சிற்பி தட்சிணாமூர்த்தி (74) சென்னையில் வியாழக்கிழமை (செப்.22) காலமானார். அவருக்கு வசந்தகுமாரி என்ற மனைவியும், அன்புக்குமரன் என்ற மகன், அபிராமி என்ற மகள் உள்ளனர்.
காலமானார் சிற்பி தட்சிணாமூர்த்தி

சுடுமண் சிற்பி தட்சிணாமூர்த்தி (74) சென்னையில் வியாழக்கிழமை (செப்.22) காலமானார். அவருக்கு வசந்தகுமாரி என்ற மனைவியும், அன்புக்குமரன் என்ற மகன், அபிராமி என்ற மகள் உள்ளனர்.
சிற்பி சி.தட்சிணாமூர்த்தி, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 1943-இல் பிறந்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்தார். அவர் கலைத் தொழில் கல்லூரியில் 1970-இல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிந்துள்ளார்.
கடந்த 42 ஆண்டுகளாக வண்ணக்கலை, சுடுமண் சிற்பம், நவீன சிற்பக்கலை வல்லுநராக விளங்கியவர். அத்துடன், தேசிய விருது (சுடுமண் சிற்பம்) உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்றும், சிற்பத் துறை குறித்து தட்சிணாமூர்த்தி உரையாற்றியுள்ளார். அவரின் இறுதிச்சடங்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடர்புக்கு: 8105265151.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com