திருவள்ளூர் மாவட்டத்தில் 40 போலி மருத்துவர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 40 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
Published on



திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 40 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியில் புதன்கிழமை கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் ராபட் (40) கைது செய்யப்பட்டார்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினரால் 40 போலி மருத்துவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே பொது மக்கள் தங்களது பகுதியில் உள்ள போலி மருத்துவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

புகார்களை தெரிவிக்கும் நபர்களின் எண்கள் பற்றிய விவரங்கள் இரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com