
உலக பாரம்பரிய தினத்தையொட்டி, மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒருநாள் மட்டும் கட்டணம் இல்லாமல் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
ஏப்ரல் 18-ஆம் தேதியை உலக பாரம்பரிய தினமாக இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி இந்நாளில் தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படும் இடங்களில் பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
இந்த ஆண்டும் தொல்லியல் துறை சார்பில் உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய சின்னங்கள், இடங்களைப் பார்வையிட கட்டணம் வசூலிக்கப்படாமல் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் மாமல்லபுரத்துக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து பார்வையிட்டுச் சென்றனர். இதுபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல தொல்லியல் இடங்களைப் பார்வையிடவும் திங்கள்கிழமை கட்டணம் வசூலிக்கப்படவில்லை.