
விஜயகாந்த் முதல்வரானதும் அனைத்து நதிகளும் இணைக்கப்படும் என, பிரேமலதா புதன்கிழமை தெரிவித்தார்.
ஆண்டிபட்டியில் நடைபெற்ற தேமுதிக வேட்பாளர் எம்.என்.கிருஷ்ணமூர்த்தி அறிமுகக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்தப் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள திப்பரேவு அணைத் திட்டம், விஜயகாந்த் முதல்வரானதும் நதிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். அதே போல இந்தப் பகுதியில் விளையும் மல்லிகைப் பூ, மரிக்கொழுந்து ஆகியவற்றை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு வசதி செய்யப்படும். மேலும் நறுமணத் தொழிற்சாலை இங்கு அமைக்கப்படும். வைகை அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். 60 வயதை கடந்த விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் முதியவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். நூறு நாள்கள் திட்ட பயனாளிகளுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு பள்ளியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.