

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநராக ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலராக எஸ்.நாகராஜன் பணியாற்றி வந்தார். அவர், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் காலியாக இருந்த தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர்- முதன்மைச் செயல் அலுவலராக ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து தேர்தல் ஆணையத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.