தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. இதுவரை 4 ஆயிரத்து 82 பேர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர்.
சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. அதிமுக, திமுக, தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி என அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சைகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
வியாழக்கிழமை வரை 4 ஆயிரத்து 82 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில், ஆண்கள் 3 ஆயிரத்து 612 பேர், பெண்கள் 468 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் ஆவர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை (ஏப்.30) நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இறுதி வாக்காளர் பட்டியல் அன்று மாலை வெளியிடப்படும். வாக்குப் பதிவு மே 16-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 19-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.