முழு மூச்சோடு தேர்தல் பணியாற்றுங்கள்: அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

அதிமுகவினர் முழு மூச்சோடு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முழு மூச்சோடு தேர்தல் பணியாற்றுங்கள்: அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

அதிமுகவினர் முழு மூச்சோடு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அவர் அதிமுகவினருக்கு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள கடிதம் வருமாறு:
 எப்போதும் தங்களது குடும்பத்தின் வசமே ஆட்சி அதிகாரம் அனைத்தும் இருந்திட வேண்டும் எனத் துடிக்கிறவர்களிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்றவும், ஏழை-எளிய, உழைக்கும் மக்களுக்கு அதிகாரத்தில் பங்களிக்கும் அதிமுகவின் புரட்சிகர அரசியல் பயணத்தைத் தொடர்ந்து நிலைநாட்டவும், நடைபெறும் தேர்தல்தான் இந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தல்.
 குடும்ப ஆட்சிக்கு...: குடும்ப ஆட்சி முறை என்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு முற்றிலும் விரோதமானது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியையும், அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் முழுமையாக தங்களுக்குள்ளேயே வைத்திருப்பது அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற மக்களாட்சி தத்துவத்தின் அடித்தளத்தை சின்னாபின்னமாக்கும்.
 அரசியல் அதிகாரத்தின் மீது கொண்ட பேராசையைத் தவிர, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரத் துடிப்பதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.
 அதிமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி குவிக்க...: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இப்போதைக்கு மட்டுமல்ல, பல தலைமுறைகளுக்கு செழிக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் தொடர வேண்டும். எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கின்ற ஜனநாயகப் பண்பு வளர வேண்டும். அதற்கு நாம் வெற்றி மேல் வெற்றி குவித்தாக வேண்டும்.
 அவரவர் சார்ந்த தொகுதிகளில்...ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி குழு முதல் வாக்குச் சாவடி குழு வரை பொறுப்பு வகிக்கும் கட்சியினர், வாக்காளர்களைச் சந்தித்து தமிழக அரசின் நற்செயல்கள் குறித்து விளக்கிக் கூற வேண்டும். அவரவர் சார்ந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் பணியாற்றுவது மிகவும் அவசியம். ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில் பணியாற்றுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
 அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 234 தொகுதிகளிலும் வெற்றிச் சின்னமாம் இரட்டை இல்லைச் சின்னம் இந்தத் தேர்தல் களத்தில் போட்டியிடுகிறது. எம்.ஜி.ஆரின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவில் சரித்திர சாதனை படைத்திட வேண்டும். எந்தச் சூழலிலும், எந்த நேரத்திலும் நம்மை விட நம்முடைய கட்சி பெரிது, நமது கட்சியின் வெற்றியே நமது வெற்றி என்ற கொள்கை வேட்கையோடு ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.
 234 தொகுதிகளிலும் "நானே' நிற்கிறேன்: 234 தொகுதிகளிலும் நானே வேட்பாளராகக் களத்தில் நிற்கிறேன் என்ற உணர்வோடு அனைவரும் முழுமூச்சோடு தேர்தல் பணியாற்ற வேண்டும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com