வேலூர் கல்லூரியில் விழுந்தது விண்கல் அல்ல: நாசா

தமிழ்நாட்டின் வேலூர் அருகே ஒரு பொறியியல் கல்லூரியில் விழுந்தது விண்கல் அல்ல என்று நாசா கூறியுள்ளதாக நியூயார் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வேலூர் கல்லூரியில் விழுந்தது விண்கல் அல்ல: நாசா

தமிழ்நாட்டின் வேலூர் அருகே ஒரு பொறியியல் கல்லூரியில் விழுந்தது விண்கல் அல்ல என்று நாசா கூறியதாக நியூயார் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகிலுள்ள பாரதிதாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் வானத்திலிருந்து கீழே விழுந்த மர்மப் பொருள் (விண்கல்) குடிநீர்த் தொட்டி அருகே பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதில் குடிநீர் தொட்டி அருகே நின்றிருந்த கல்லூரியின் பேருந்து ஓட்டுநர் காமராஜ் படுகாயமடைந்து இறந்தார். மேலும் ஓட்டுநர் சுல்தான், தோட்டத் தொழிலாளர்கள் சசிகுமார், முரளி, கல்லூரி மாணவர் சந்தோஷ் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திலிருந்து கிடைத்த பொருள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் நேற்று ஆய்வு செய்தனர். விண்கல் விழும் என்பது குறித்த கணிப்பு ஏதும் இல்லாத நிலையில், விண்கல் விழுந்திருந்தால் இது ஓர் அரிய நிகழ்வு ஆகும் என அந்நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.சிஅனுபமா கூறினார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, வேலூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களை பார்க்கும் போது அது தரையில் நடைபெற்ற ஒரு வெடிவிபத்து போன்று உள்ளது என கூறியுள்ளது.

விண்கல் விழுந்து ஒருவர் இறப்பது என்பது அரிதிலும் அரிதாக நடைபெறும் நிகழ்வு என நாசா விஞ்ஞானி லிண்டலி ஜான்சன் கூறியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் விண்கல் விழுந்ததில் பலர், குறிப்பாக குழந்தைகள் காயமடைந்தனர்.

விண்கல் வானிலிருந்து விழும் நிலையில் பூமியை அடையும்போது குளிர்ந்துவிடும். வேலூரில் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள் சில கிராம் எடையே உள்ளது. அது பூமியில் உள்ள பாறையின் துண்டாக இருக்கலாம் என நாசா கூறியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com