
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே மாங்காய் மரத்தில் வெட்டிய மரக்கிளையிலிருந்து 25-க்கும் மேற்பட்ட மாங்காய்கள் கொத்தாக காய்த்திருப்பதை அப்பகுதி கிராம மக்கள் அதிசயத்துடன் பார்த்துச் சென்றனர்.
வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் கல்லரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் படவேட்டான். இவருக்குச் சொந்தமான நிலத்தில் மாங்காய் மரங்கள் உள்ளன. இதில் ஒரு மாங்காய் மரத்தின் வெட்டிய மரக்கிளையிலிருந்து 25-க்கும் மேற்பட்ட மாங்காய்கள் கொத்தாக காய்த்துள்ளன. வழக்கமாக மரக்கிளைகளில் அதிகபட்சமாக 5 மாங்காய்கள் காய்க்கும். வெட்டப்பட்ட மரக்கிளையிலிருந்து 25-க்கும் மேற்பட்ட மாங்காய்கள் கொத்தாக காய்த்துள்ளதை கிராம மக்கள் அதிசயத்துடன் பார்த்து சென்று வருகின்றனர்.