உள்ளாட்சித் தேர்தலுக்கு வெளிமாநில அதிகாரிகள்:திமுக வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை பாரபட்சம் இல்லாமல் நடத்த, வெளி மாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை பாரபட்சம் இல்லாமல் நடத்த, வெளி மாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு செயலாளர்கள், சட்டத்துறை அரசு செயலாளர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர்களே அந்தந்த மாவட்டத்துக்கான தேர்தல் அதிகாரியாகச் செயல்படுவர். மாநகராட்சி, நகராட்சி தேர்தலை அந்தந்த ஆணையர்கள் நடத்துவர்.

வெளிமாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: இந்த அதிகாரிகள் அனைவரும் தற்போதைய ஆளும் அரசின் கீழ் செயல்படக் கூடியவர்கள் என்பதால் தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆளும் கட்சியினர் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தும் அதிகாரிகளைத் தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வைக்கக் கூடிய நிலை ஏற்படும்.

எனவே, தற்போது மாவட்ட ஆட்சியர்களாக உள்ளவர்களை மாற்றிவிட்டு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொதுவான தேர்தல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மாநகராட்சிகளில் ஆணையருக்கு நிகரான தகுதியுள்ள வெளி மாநில அதிகாரிகளை நியமித்து தேர்தலை நடத்த வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்ட ஆட்சியர் தகுதியில் தலா ஒரு தேர்தல் பார்வையாளரையும் வெளிமாநிலத்தில் இருந்து நியமிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கண்காணிக்கும் வகையிலும், சுதந்திரமாகச் செயல்படும் வகையிலும் அவர்களுக்கு அதிகாரங்கள் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com