
சென்னை பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் பி அண்ட் ஜி நிறுவனத்தின் ஷிக்ஷ திட்டத்தின் கீழ், கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், அவரது மனைவியும் ஸ்குவாஷ் வீராங்கனையுமான தீபிகா பலிக்கல் மாணவர்களுடன் வியாழக்கிழமை கலந்துரையாடினர்.
பி அண்ட் ஜி நிறுவனம் சார்பில் சிக்ஷô திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டன.
தமிழகத்தில் மட்டும் 73 பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஷிக்ஷô திட்டத்தின் கீழ் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கல் ஆகியோர் சிக்ஷô திட்டத்தின் சூப்பர் ஹீரோவாக அறிவிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட் மற்றும் ஸ்குவாஷ் விளையாடுவதற்கு அவர்கள் பயிற்சி அளித்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தீபிகா பலிக்கல் கூறியதாவது:
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வி வழங்குவதையும், அவர்களுக்கான வசதியான சூழலையும் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஒரு பொறுப்புடைய குடிமக்களாக உயர்ந்து நாட்டைப் பெருமைப்படுத்துவர் என்றார் அவர்.