
பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணிக்கு 75 சதவீத மக்கள் ஆதரவு உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் பாமக வேட்பாளர்கள் அறிமுக பொதுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 11 தொகுதிகளிலும் பாமக வெற்றி பெறுவதும் உறுதி. எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பதும் உறுதி. அந்த அளவுக்கு மக்கள் ஆதரவு பாமகவுக்கு பெருகி வருகிறது.
ஆற்றல் மிக்க முதல்வர் வேட்பாளராக அன்புமணி வலம் வருகிறார். அவருக்கு இளைஞர்கள், பெண்கள், நடுநிலையாளர்கள் என 75 சதவீத மக்களின் ஆதரவு உள்ளது. பாமகவுக்கு 200 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளதாக நேற்று தெரிவித்தேன். இன்று அது 202 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என்றார் அவர்.