
சென்னை : வங்கக் கடலில் நாளை உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் 16ம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம், தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. இது இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாழ்வு நிலை அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக உருவாகும். இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மே 16ம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.