
புதுச்சேரி :
புதுச்சேரியில் வரும் 16ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமி வீட்டில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கார் நிறுத்துமிடம், வீட்டின் பின்புறம், மாடிப்படிகள், தோட்டப் பகுதியிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். 10 நிமிடம் இந்த சோதனை நீடித்தது.
சோதனை நடந்த போது, ரங்கசாமி வீட்டில் இல்லை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
ரங்கசாமி வீட்டில் பணம் மற்றும் ஏராளமான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு வந்த ரகசிய புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புகார் அளித்தவர் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.
வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கதிர்காமம் பகுதியில் உள்ள ரங்கசாமியின் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.