

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில், கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டது. இந்த கூட்டணியின் தேமுதிக விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
எனினும், இக்கூட்டணியினர் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தனர். குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் போட்டியிட் உளுந்தூர்பேட்டை தொகுதியில் வைப்புத் தொகையை இழந்தார்.
கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்த நிலையில், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வைகோ, தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இன்று மாலை, தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.