
அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க முதல் சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே அதற்கான சட்டங்களை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதும், பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதும் தவிர்க்க முடியாதவை ஆகும். அதனால், அரசுக்கு ஊழலை ஒழிப்பதில் அக்கறை இருந்தால் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அதற்கான சட்டங்களை அரசு கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.