தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நடிகர் சரத்குமார், மனைவி ராதிகா இருவரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்! 

நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா இருவரும் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்கள்.

News image
Updated On :12 ஏப்ரல் 2017, 9:52 am

DIN

சென்னை: நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா இருவரும் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரரானார்கள்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி.சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள் மற்றும் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் ஆகியோர் வீடுகள் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7, 8-ஆம் தேதிகளில் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணம் தொடர்பாக வருமான வரித்துறையினர் சரத்குமாரிடம் கடந்த 8-ஆம் தேதியன்று காலை  11.20 தொடங்கி மாலை 07.30 மணி வரை விசாரனை நடத்தினர்.

இந்த நிலையில், சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகாவுக்கு சொந்தமான தேனாம்பேட்டை ஜெயம்மாள் சாலையில் உள்ள ராடன் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் திடீர் சோதனை நடத்தினர். விசாரணையின்போது சரத்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், இச் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே மாலை 3 மணிக்கு கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர்.

அங்கிருந்த சரத்குமாரிடம் சுமார் ஒரு மணி நேரம் அந்த அதிகாரிகள் விசாரணை செய்தனர். பின்னர் சரத்குமார் தனது காரில் தேனாம்பேட்டையில் உள்ள ராடன் நிறுவன அலுவலகத்துக்கு வந்தார். அவருடைய காரில் வருமான வரித்துறை அதிகாரிகளும் வந்தனர்.

ராடன் நிறுவனத்தின் வங்கி கணக்குகளும், சில ஆவணங்களும் சரத்குமார் பெயரிலும், ராதிகா பெயரிலும் இருந்ததால், அதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், ராடன் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை வருமான அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு 9 மணியை தாண்டியும் நீடித்தது. இந்தச் சோதனையின்போது சரத்குமாருடன் அவரது ஆடிட்டர், வழக்குரைஞர்கள் ஆகியோர் இருந்தனர்.

சோதனையின் முடிவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ராதிகாவுக்கு, மீண்டும் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சரத்குமாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா இருவரும் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரரானார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.