
சென்னை: தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு வரும் 27-ம் தேதி வரை காவல் நீட்டித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசியதால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஏப்ரல் 2-ஆம் தேதி அவரை 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 15 நாள் காவல் முடிந்து இன்று சென்னை எழும்பூர் நிதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு ஏப்ரல் 27 வரை நீதிமன்றக்காவல் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் முன்பு செய்தியாளர்களிடம் வைகோ பேசியதாவது: விவசாயிகள் தானே அவர்கள் அரை நிர்வாணமாக இருந்தால் என்ன? நிர்வாணமாக இருந்தால் என்ன என்று பிரதமர் நரேந்திர மோடி அலட்சியமாக இருந்து வருகிறார். பிரதமர் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுவதை ஆதாரத்துடன் அவரிடமே கூறி்யதாக தெரிவித்த வைகோ, பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் போராடி வரும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசி, அவர்களது கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தினார்.
மேலும் இந்த வழக்கில் தண்டனை கிடைத்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.