தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் 'விர்ர்' ; ஊக்கத்தொகை 'கட்' !

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படுவதாக தமிழக  அறிவித்துள்ளது.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2017, 8:38 am

DIN

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படுவதாக தமிழக  அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

தமிழ்நாடு மாநில விற்பனை ஆணையத்தில் (டாஸ்மாக்) பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டாஸ்மாக் மது விற்பனையகத்தில் பணியாற்றும் மேற்பார்வையாளர்களுக்கு சம்பளமானது ரூ. 7500-இல் இருந்து ரூ.9500 ஆக உயர்த்தப்படுகிறது.

விற்பனையாளர்களுக்கு சம்பளமானது ரூ. 5600 -இல் இருந்து ரூ.7500 ஆக உயர்த்தப்படுகிறது. 

அதேபோல் விற்பனை உதவியாளர்களுக்கு சம்பளமானது ரூ. 4200 -இல் இருந்து ரூ.6500 ஆக உயர்த்தப்படுகிறது.  

இந்த ஊதிய உயர்வுகள் அனைத்தும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

அதேநேரம் இதுவரை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விற்பனை ஊக்கத்தொகையானது நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.