தில்லியில் இன்று பிரதமரை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?
தில்லியில் திங்கள்கிழமை (ஆக.14) பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தில்லியில் திங்கள்கிழமை (ஆக.14) பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வியாழக்கிழமை தில்லி சென்றார். பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் சந்திக்கவில்லை. இந்நிலையில் தில்லியிலிருந்து மும்பை சென்று பன்னீர்செல்வம், பின்னர் ஷீரடி சாய்பாபா ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பையிலிருந்து புறப்பட்டு மீண்டும் தில்லி சென்றார். திங்கள்கிழமை பிரதமர் மோடியை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...