வாடகை பாக்கி என்கிற குற்றச்சாட்டுக்கு ஆஸ்ரம் பள்ளி விளக்கம்!
சென்னை - கிண்டியில் உள்ள ஆஸ்ரம் பள்ளி பூட்டப்பட்டது தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது...


சென்னை - கிண்டியில் உள்ள ஆஸ்ரம் பள்ளி பூட்டப்பட்டது தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் கிண்டி கிளையைச் சேர்ந்த ஆஸ்ரம் பள்ளிக்கு 5 ஆண்டுகளாக ரூ. 10 கோடி வாடகைப் பணம் பாக்கி வைத்துள்ளதால், கட்டட உரிமையாளர் பள்ளியைப் பூட்டுப் போட்டு மூடியதாக இன்று செய்திகள் வெளியாகின. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் பள்ளி முதல்வர் வந்தனாவும் பள்ளித் தரப்பு வழக்கறிஞரும் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:
கட்டட உரிமையாளர் குடும்பப் பிரச்னையால் பள்ளிக்கு மிகுந்த தொல்லை கொடுத்தார். அதிகமான வாடகை வசூலிப்பதால் இந்தப் பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது. பள்ளி குறித்து அவதூறு செய்தியைப் பரப்பியுள்ளார். பள்ளிக்குக் களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ரூ. 10 கோடி வாடகை நிலுவை கிடையாது. பள்ளி மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...