விசாரணை கமிஷன் வேண்டுமென்றால் பதவியை ராஜிநாமா செய்யுங்க: முதல்வர் பழனிசாமியிடம் வேண்டுகோள்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென்றால், முதல்வர் பழனிசாமி தன்னுடைய  பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென்று டிடிவி தினகரன் ...
விசாரணை கமிஷன் வேண்டுமென்றால் பதவியை ராஜிநாமா செய்யுங்க: முதல்வர் பழனிசாமியிடம் வேண்டுகோள்!
Published on
Updated on
1 min read

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென்றால், முதல்வர் பழனிசாமி தன்னுடைய  பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென்று டிடிவி தினகரன் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி  தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டி விபரம் வருமாறு:

ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணை நியாயமாக நடைபெற வேண்டுமானால், முதல்வர் பழனிசாமி தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அதேபோல ஓ.பி.எஸ்சும் புதிய பதவி எதையும் ஏற்க கூடாது. அப்போதுதான் விசாரணை நேர்மையாக நடைபெறும்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சையில் இருந்தபோது ஓ.பி.எஸ்- இ.பி.எஸ். இருவரும் அங்கே மருத்துவ மனையிலேயே இருந்தவர்கள்தான். எனவே இவர்களுக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை.

அத்துடன் இந்த விசாரணை கமிஷனில் 2 நீதிபதிகள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். இந்த சமயத்தில் சபாநாயகர் தனபால் முதல்வராக செயல்படலாம்.

அ.தி.மு.க. இரு அணிகள் இணையும் பட்சத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கோ , அவரது ஆதரவாளர்களுக்கோ அமைச்சர் பதவி வழங்கக்கூடாது. இந்த ஆட்சியை காப்பாற்ற 122 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வாக்களித்துள்ளனர். எனவே புதிய அமைச்சரவை அமைக்கப்படும் பொழுது அவர்களில் சிலருக்கு  அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com