சாக்லெட்டுக்கு டிக்கெட்: ஆபாச அர்ச்சனைகளுடன் அரசுப் பேருந்து நடத்துனர் அடாவடி!

பயணிகள் இருவர் தன் மடியில் வைத்திருந்த சாக்லெட்டுக்காக டிக்கெட் வழங்கி அரசுப் பேருந்து நடத்துனர் அடாவடி செய்துள்ளார்.
சாக்லெட்டுக்கு டிக்கெட்: ஆபாச அர்ச்சனைகளுடன் அரசுப் பேருந்து நடத்துனர் அடாவடி!
Published on
Updated on
1 min read

பயணிகள் இருவர் தங்கள் மடியில் வைத்திருந்த 480 கிராம் எடையுள்ள சாக்லெட் பெட்டிகளுக்கு டிக்கெட் வழங்கி அரசுப் பேருந்து நடத்துனர் அடாவடி செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த போளூரில் வசிக்கும் பன்னீர்செல்வம் என்பவர் அப்பகுதியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவர் கடந்த டிம்பர் 7-ந் தேதி வியாபார நிமித்தமாக சென்னையில் உள்ள மொத்த விற்பனையகத்துக்கு தனது நண்பருடன் வந்து பல்சரக்கு வாங்கி அதனை தனி வாகனத்தில் அனுப்பிவைத்தார்.

அவரது இந்த வியாபாரத்துக்காக சென்னையிலுள்ள அந்த மொத்த விற்பனையகம் 480 கிராம் எடையுள்ள 2 கின்டர் ஜாய் ரக சாக்லெட்டுகள் அடங்கிய பெட்டியை சன்மானமாக வழங்கியது. 

எனவே அதை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்ட பன்னீர்செல்வம், தனது நண்பருடன் சென்னையிலிருந்து போளூருக்கு செல்லும் 202 எண் கொண்ட சொகுசுப் பேருந்தில் பயணிக்கத் தொடங்கினார்.

பேருந்து பூந்தமல்லியைத் தாண்டி தேசிய நெடுஞ்சாலையில் பயணமாகும் போது இவர்கள் இருவருக்கும் ரூ.250 கொடுத்து பயணச்சீட்டு வாங்கியுள்ளார். அச்சமயம் இவர்களின் மடியில் இருந்த அந்த சாக்லெட் பெட்டிகளுக்கும் கட்டாயம் டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறி அந்த பேருந்தின் நடத்துனர் ஜகத்ரட்சகன் அடாவடி செய்துள்ளார்.

இருப்பினும், தங்கள் இருவரிடமும் உள்ள அந்த பெட்டியின் எடை 480 கிராம் மட்டுமே எனக்கூறியும் அதற்கு நடத்துனர் சம்மதிக்கவில்லை. மேலும், பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர் இருவரையும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பேருந்தில் இருந்து இறக்கி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் ரூ.33 என்ற மதிப்பில் அந்த 2 சாக்லெட் பெட்டிகளுக்கும் சேர்த்து ரூ.66 பயணச்சீட்டு வாங்கினார். 

இந்நிலையில், போளூர் வந்தபின் அங்குள்ள அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பன்னீர்செல்வம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் திருவண்ணாமலையில் உள்ள தலைமையகத்துக்கு பொது மேலாளர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த நடத்துனர் தவறு செய்ததது உறுதியானால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாகவும் திருவண்ணாமலை அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com