காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன், பாறை எரிவளி எடுக்கும் திட்டம் இல்லை: அன்புமணி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் எரிவளி, பாறை எரிவளி ஆகியவற்றை எடுக்கும் திட்டம் இல்லை; அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன், பாறை எரிவளி எடுக்கும் திட்டம் இல்லை: அன்புமணி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
Updated on
1 min read

காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் எரிவளி, பாறை எரிவளி ஆகியவற்றை எடுக்கும் திட்டம் இல்லை; அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அமைச்சர் பிரதான் இவ்வாறு கூறியிருக்கிறார். காவிரி பாசன மாவட்டங்களில்  மீத்தேன் எரிவளி, பாறை எளிவளி, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தும் யோசனை எதுவும் மத்திய அரசிடம் உள்ளதா? என்று அன்புமணி ராமதாஸ் வினா எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான்,‘‘ தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் எந்தவொரு மீத்தேன் எரிவளித் திட்டமோ, பாறை எரிவளித் திட்டமோ செயல்படுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி,  காவிரி பாசன மாவட்டங்களில் இனிவரும் காலங்களில் பாறை எரிவளி, பாறை எண்ணெய் உள்ளிட்ட எதையும் எடுக்கும் திட்டமில்லை’’என்று உறுதியளித்தார்.

அதேநேரத்தில் காவிரிப் பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய வினாவுக்கு நேரடியாக பதிலளிக்காத அமைச்சர் பிரதான்,‘‘ தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு பாசன மாவட்டங்களில் விவசாயத்துடன்  சேர்த்து எரிவளி மற்றும் எரிவாயுத் திட்டங்கள் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’என்று மட்டும் பதிலளித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com