வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

விண்ணப்பதாரர்களிடம் தகுதிச் சான்று கேட்கக் கூடாது: பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களிடம் அவர்கள் முடித்துள்ள படிப்புக்கான தகுதிச் சான்றை பொறியியல் கல்லூரிகள் கேட்கக் கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில்

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:59 pm

DIN

பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களிடம் அவர்கள் முடித்துள்ள படிப்புக்கான தகுதிச் சான்றை பொறியியல் கல்லூரிகள் கேட்கக் கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது. 
இதுதொடர்பாக ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து ஊதியக் குறைபாடு, கல்வித் தகுதி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் ஏஐசிடிஇ-க்கு வருகின்றன. குறிப்பாக, பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களிடம், அவர்கள் முடித்திருக்கும் கல்விக்கு ஏஐசிடிஇ-யிடமிருந்து தகுதிச் சான்று அல்லது இணையான பட்டப் படிப்பு தகுதிச் சான்றை பெற்று வருமாறு கல்லூரிகள் அறிவுறுத்துவதாகப் புகார்கள் வருகின்றன. 
அவ்வாறு, கல்விக்கான தகுதிச் சான்றையோ அல்லது இணையான பட்டப் படிப்பு தகுதிச் சான்றையோ விண்ணப்பதாரரிடம் கல்லூரிகள் கேட்கக் கூடாது.
மேலும், பேராசிரியர்களுக்கான ஊதியம் உள்பட பிற விவகாரங்களுக்கு அந்தந்த மாநில அரசு அல்லது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி கல்லூரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.