முதுமலையில் கடும் வறட்சி: உணவு, குடிநீர் தேடி இடம்பெயரும் வன விலங்குகள்

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதி முற்றிலும் வறண்டு விட்டதால், வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி கூட்டமாக இடம் பெயரத் தொடங்கி உள்ளன.
முற்றிலுமாக வறண்டு காணப்படும் முதுமலை புலிகள் காப்பக வனம்.
முற்றிலுமாக வறண்டு காணப்படும் முதுமலை புலிகள் காப்பக வனம்.
Published on
Updated on
1 min read

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதி முற்றிலும் வறண்டு விட்டதால், வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி கூட்டமாக இடம் பெயரத் தொடங்கி உள்ளன.
முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. 321 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட முதுமலை, புலிகள், யானைகள், காட்டெருமைகள், மான்கள், அரிய வகை கழுதைப் புலிகள், சிறுத்தைகள், பல்வேறு பறவை இனங்கள் உள்பட பல வகையான வன உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது.
கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் சரணாலயம், கேரள மாநிலத்தின் வயநாடு முத்தங்கா சரணாலயம் ஆகிய மூன்று மாநில வனங்களை இணைக்கும் பகுதியாகவும் உள்ளது. வழக்கமாக, ஏப்ரல் மாதம் கோடையின் தாக்கம் அதிகரிக்கும் காலத்தில்
வறண்டுபோகும் முதுமலை வனப் பகுதி, இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் ஜனவரி மாதத்திலேயே வறண்டு விட்டது. கடும் வறட்சியின் காரணமாக, முதுமலை வனத்தின் ஒரே நீராதாரமான மாயாறு வறண்டு, பாறை இடுக்குகளில் தண்ணீர் சிறு குளங்களாகக் காணப்படுகிறது. புலிகள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் எண்ணிக்கை அண்மையில் பெருகி இருக்கும் நிலையில், வன விலங்குகளால் வறட்சியைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
கர்நாடகத்தில் உள்ள பந்திப்பூர் சரணாலயமும் கடும் வறட்சியில் சிக்கியுள்ளது. கேரளத்தின் முத்தங்கா சரணாலயத்தில் சதுப்பு நிலம் அதிகமாக உள்ளதால், இதையொட்டிய பகுதி பசுமையாகக் காணப்படுகிறது. இங்கு தண்ணீரும் காணப்படுகிறது. இதன் காரணமாக யானைகள், முத்தங்கா பகுதியை நோக்கி கூட்டம், கூட்டமாக இடம் பெயர்ந்து செல்கின்றன. கடும் வறட்சியின் காரணமாக காட்டுத் தீயின் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து முதுமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குநர் சரவணன் கூறியதாவது:
வனங்கள் வறண்டு காணப்பட்டாலும், உள் பகுதியில் விலங்குகளுக்குப் போதுமான
நீராதாரம் உள்ளது. உள்பகுதியில் வறட்சி இல்லை. வனத்தில் உள்ள செயற்கைக்
குளங்களில் தினமும் வன விலங்குகளுக்காகத் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இதனால், வன விலங்குகளின் தேவைக்குப் போதுமான குடிநீர் உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com