தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்  - சுப்ரமணியன் சுவாமி 'திடீர்' சந்திப்பு! 

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்  - சுப்ரமணியன் சுவாமி 'திடீர்' சந்திப்பு! 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி சுப்ரமணியன் சுவாமி சந்தித்து பேசினார்.
Published on

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி சுப்ரமணியன் சுவாமி சந்தித்து பேசினார்.

தமிழக அரசியல்களத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இடையேயான அதிகார போட்டி தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஆளுநரை பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யான சுப்ரமணியன் சுவாமி இன்று ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார்.

சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் இந்த சந்திப்பு நடந்தது.  தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் நிலவரம் பற்றி ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் எம்.பி. சுப்ரமணியன் சுவாமி ஆலோசனை நடத்தினார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com