கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதிய அமைச்சரவையில் யாருக்கு இடம்? டி.டிவி. தினகரனுடன் போயஸ் தோட்டத்தில் எடப்பாடி ஆலோசனை!

இன்று மாலை நான்கு மணிக்கு பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்க உள்ள அமைச்சர்கள் யார் யார் என்பது தொடர்பான ஆலோசனை ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:01 am

DIN

சென்னை: இன்று மாலை நான்கு மணிக்கு பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்க உள்ள அமைச்சர்கள் யார் யார் என்பது தொடர்பான ஆலோசனை போயஸ் தோட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டிவி. தினகரன் தலைமையில் நடந்து வருகிறது.

தமிழகத்தில் நிலவி வந்த அரசியல் நிலையற்ற தன்மைக்கு முடிவுக்கட்டும் விதமாக அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று காலை அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்துஇன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்று ம் அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்க உள்ள அமைச்சர்கள் யார் யார் என்பது தொடர்பான ஆலோசனை போயஸ் தோட்டத்தில் அதிமுகவின் துணை பொது செயலாளர் டி.டிவி. தினகரன் தலைமையில் நடந்து வருகிறது. 

இந்த ஆலோசனையில் முதல்வர் பதவிக்கு தேர்வாகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், சி.வி.சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியயோர் இடம் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.