வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சசிகலா vs ஸ்டாலின்: உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறார் ஸ்டாலின்: சசிகலா சாடல்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பாக மு.க. ஸ்டாலின் பேசி வருவதாக அதிமுக பொதுச் செயலர் சசிகலா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:40 am

DIN

சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பாக மு.க. ஸ்டாலின் பேசி வருவதாக அதிமுக பொதுச் செயலர் சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலரான பிறகு, சசிகலா வெளியிட்டிருக்கும் முதல் அரசியல் தொடர்பான அறிக்கையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரடியாக தாக்கிப் பேசியிருக்கிறார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கூட்டணியில் திமுக  இருந்தபோது தான், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

அப்போதே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, அவசரச் சட்டம் இயற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். ஜல்லிக்கட்டுக்கான சட்டப் போராட்டங்களை ஸ்டாலின்  தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும்,உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து பிறப்பித்த ஆணையை மறு சீராய்வு செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது.  மறைந்த ஜெயலலிதா ஆணைப்படிதான்  மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

2015ல் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க அவசரச் சட்டம் இயற்றக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

தமிழக மக்களின் நலனுக்காகவே, தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என்று சசிகலா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.