வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

டிவிட்டரில் குஷ்பூவை சீண்டிய 'பீட்டா': கிடைத்ததோ 'ரிவிட்' !

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நடிகை குஷ்பூவுக்கு அறிவுரை சொல்லும் விதத்தில் டிவிட்டரில் கருத்திட்ட 'பீட்டா' அமைப்புக்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:45 am

DIN

சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நடிகை குஷ்பூவுக்கு அறிவுரை சொல்லும் விதத்தில் டிவிட்டரில் கருத்திட்ட 'பீட்டா' அமைப்புக்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தடை காரணமாக ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் 'பீட்டா' அமைப்புக்கு எதிராக, 'மடகாஸ்கர் நாட்டு ரூபாய் நோட்டில் ஜல்லிக்கட்டு புகைப்படம் உள்ளது. இந்த விஷயம் எல்லாம் 'பீட்டா' அமைப்புக்கு தெரியாதே என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு நேரடியாக குஷ்புவுக்கு டிவிட்டரில் பதிலளிக்கும் விதமாக 'பீட்டா' அமைப்பு ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தது. ஜல்லிக்கட்டு காளைகள் துன்புறுத்தப்படுவதற்கான ஒரு வீடியோ லிங்கை குஷ்புவுக்கு அனுப்பி, இவ்வாறெல்லாம் காளைகள் துன்புறுத்தப்படுவைத்தால்தான் இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்டவிரோதமானது என்று கூறியது.

அதற்கு குஷ்புவும் பதிலடி கொடுத்துள்ளார். அவர் 'ஜல்லிக்கட்டை உங்களால் வேறு எந்த இடத்திலாவது தடை செய்ய முடிந்ததா? மடகாஸ்கர் அரசிடம் அவர்களுடைய ரூபாய் நோட்டில் இருக்கும் ஜல்லிக்கட்டு  சின்னத்தை நீக்க கோரி பேச முடிந்ததா? என்பதை முதலில் தயவு செய்து கூறுங்கள். ஜல்லிக்கட்டால் நன்மைகள் பல உண்டு.  ஒரு விவசாயி காளை அல்லது பசுவை எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதை நிரூபிக்க நான் லட்சக்கணக்கில் வீடியோக்களை காண்பிக்க முடியும்.

ஜல்லிக்கட்டில் உங்களால் 5 தவறுகளை கட்ட முடிந்தால் என்னால் ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம் என்பதற்கு 50 ஆயிரம் சரியான விஷயங்களை காண்பிக்கமுடியும். விதிமுறைகளை நாங்கள் மதிப்போம். ஆனால் தடை விதித்தால் ஏற்க முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.