டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

எம்.ஜி.ஆர். நினைவு சிறப்பு தபால் தலை வெளியீடு : தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு சம்மதம்!

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்,ஜி.ஆர் அவர்களின் நூறாவது பிறந்த நாளை சிறப்பிக்கும் பொருட்டு சிறப்பு தபால் தலை வெளியிடப்படும்...

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:45 am

DIN

புதுதில்லி: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்,ஜி.ஆர் அவர்களின் நூறாவது பிறந்த நாளை சிறப்பிக்கும் பொருட்டு சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் வரும் 17-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி மத்திய அரசு சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 6-ம் தேதி கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று எம்.ஜி.ஆர் நினைவாக சிறப்பு தபால் தலை வெளியிட  பிரதமர் உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடியிடம் முதல்வர் பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து கொண்டதாகவும் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.