தென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை

கிருஷ்ணகிரி: விவசாயிகளுக்கு நல்ல வருவாய் தரக் கூடிய பயிராக தென்னை தமிழகம் முழுவதும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது
தென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: விவசாயிகளுக்கு நல்ல வருவாய் தரக் கூடிய பயிராக தென்னை தமிழகம் முழுவதும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இத்தகைய பயிரான தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, கூன்வண்டு தாக்குதலால் தென்னை மரம் பட்டுப்போகிறது. எனவே, விவசாயிகள் கூன்வண்டு தாக்குதல் மேலாண்மையைக் கையாள்வதன் மூலம் தென்னை சாகுபடியில் மகசூல் குறைவதை தடுத்து, நல்ல வருவாய் ஈட்டலாம்.
அறிகுறிகள்: வண்டு தாக்குதலுக்கு உள்ளான மரத்தின் கீழ் பகுதியில் சிறப்பு நிறச் சாறு வடிந்த நிலையில், சிறு சிறு துளைகள் காணப்படும்.
இந்த துளையினுள் கூன் வண்டு இருப்பதைக் காணலாம். தென்னை மரத்தின் உள் ஓலைகள் மஞ்சள் நிறாகவும், நுனிப்பக்கத்தில் உள்ள நடுகுருத்து வாடிய நிலையிலும் காணப்படும். பின்னர், மரம் முற்றிலும் காய்ந்துவிடும்.
பூச்சி விவரம்: கூன் வண்டின் முட்டையானது வெள்ளை நிறத்தில் காணப்படும்.
புழுக்கள் லேசான மஞ்சள் நிறத்தில் காணப்படும். வண்டானது சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்திலும், மார்புப் பகுதியில் 6 அடர்ந்த புள்ளிகள் காணப்படும். ஆண் வண்டுகள் நீல முகத்துடன் காணப்படும்.
மேலாண்மை முறைகள்: கூன்வண்டு தாக்குதலால் காய்ந்து போன மரம், சேதமடைந்த மரத்தை அகற்றி, கூன்வண்டின் இனப்பெருக்கத்தை தடுக்கலாம்.
தென்னந்தோப்பை துய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம் கூன்வண்டின் தாக்குதலைத் தவீர்க்கலாம்.
உழவுப் பணியின்போது தென்னை மரம் சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். காண்டாமிருக வண்டுகள் தாக்கிய மரத்தை கூன்வண்டுகள் தாக்கும்.
அதனால், மரத்தை காண்டாமிருக வண்டுகள் தாக்காமல் இருக்க தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கூன்வண்டுகள் முட்டை இடுவதைத் தடுக்க மணல், வேப்பங்கொட்டை தூளை 2:1 என்ற அளவில் கலந்து, மரத்தின் குருத்து பகுதியிலும், மேல் உள்ள மரத்தின் 3 மட்டைகளின் கீழ்ப் பகுதியிலும் இட வேண்டும்.
கூன்வண்டுகளைக் கவர்ந்து இழுக்கும் பேரொழியுர் எனப்படும் கவர்ச்சி மற்றும் உணவுப் பொறிகளை இரண்டு ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைத்து கூன்வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி அருகே உள்ள மூங்கில் புதூர் கிராமத்தில் மாணிக்கம் என்ற விவசாயின் நிலத்தில் மேற்கொண்ட சோதனையில் இந்த மேலாண்மை முறை நல்ல பயனைத் தந்துள்ளது என்கின்றனர் பெங்களூரைச் சேர்ந்த வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com