

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 300 கிலோ கடல் அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் பகுதியில் வீடு ஒன்றில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது 300 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன், ரவி ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அட்டையின் மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.